Tuesday, August 4, 2020

கேட்டல்

சண்டை போடாத மனைவி கேட்டேன்
பாசமான கொளுந்தியா கேட்டேன்

சொன்னது கேக்கும் பிள்ளைகள் கேட்டேன்
சொல்லாமல் வரும் காதல் கேட்டேன்
சொல்லிட்டு வரும் வியாதியை கேட்டேன்

உப்புமா இல்லாத பிரேக் பாஸ்ட் கேட்டேன்
உப்புமா சாப்பிட பசியை கேட்டேன்

லாக் டவுன் மொத்தம் முடிய கேட்டேன்
டவுன் பஸ் ஓட முதல்வரை கேட்டேன்

இருமல் வந்தால் குணமாக கேட்டேன்
இல்லம் வந்ததும் சோறை கேட்டேன்

நண்பர்கள் நலமாக வாழ கேட்டேன்
நல்லது நடக்க இறைவனை கேட்டேன்

ஞாயிற்றுக்கிழமை தூக்கம் கேட்டேன்
ஞாலம் போற்றும் அறிவு கேட்டேன்

KGF இல்லாத கலர்ஸ் டீவி கேட்டேன்
துப்பாக்கி போடாத விஜய் டிவி கேட்டேன்

தோசைக்கு தக்காளி சட்னி கேட்டேன்
சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு குருமா கேட்டேன்
.
.
.

கேட்டதெல்லாம் கிடைக்கும்



allvoices

No comments:

Post a Comment

Who is next Super Star ?