Thursday, August 20, 2020

ஸ்டிக்கர்

 என்னணன் வாசல் ல உக்கார்ந்து இருக்கீங்க...........

இந்த சின்ன பய வண்டில ஸ்டிக்கர் ஒட்டனும், உங்க ஃபோட்டோ குடுங்கன்னு வாங்கிட்டு போனான். அதான் வரானானு பாத்துட்டு இருக்கேன்.......

ஸ்டிக்கரா ? உங்க ஸ்டிக்கர் ஒட்டுனா, எதுவும் ஓசியா குடுக்க மாட்டாங்களே.....


அட காசு பணம் யாருக்கு வேணும், இவளவு நாளாக பொண்ணு பாத்துட்டு இருக்காங்க. எதுவும் அமையலயாம். என் ஸ்டிக்கர் ஒட்டுனா, என் ஃப்ரெண்ட்னு சொல்லி பொண்ணு குடுத்து ருவாங்கள. அதுக்கு தான்........





allvoices

கடுப்பு குறிப்பு

 பொண்டாட்டியை கடுப்பேத்த தேவையான பொருட்கள்


தேவையானளவு கொழுப்பு, 

பக்கத்துல ஒரு கொழுந்தியா,

கதறினால் கேட்கும் தூரத்தில் மாமானார் அல்லது மச்சான், அப்புறம் மச்சினி தேவையான அளவு.....


allvoices

சோதனை

 'என்னங்க இது?' என்ற கேள்விக்கு "குடிச்சு பாத்துட்டு சொல்லுங்க"என்ற மனைவியின் பதிலை விடவா 


ஒருத்தன ஆண்டவன் பெருசா சோதிச்சிட முடியும்


allvoices

சிறந்த பதிவர்

 இந்த மாதத்தின் சிறந்த பதிவர் விருது, முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்..........



allvoices

லட்சியம்

 "லட்சங்கள் வேண்டாம், லட்சியமே போதும்"


'அப்படி என்னப்பா உன் லட்சியம்?


"கோடிக்கணக்கா சம்பாதிக்கனும்டா"


allvoices

இரண்டாம் தலைநகரம்

 ஹலோ செல்வா பேசுறேன்


ஆமாம் இரண்டாம் தலைநகரம் மதுரை ல இருந்து தான் பேசுறேன்.........


allvoices

கண்களும் கவி பாடுதே

 ஒத்த பார்வை பார்த்தா உடம்பு ல சக்தி ஏறுதாத்தா

கத்தாள கண்ணால குத்தாத நீ என்னை

காந்தக் கண்ணழகி......


கடைசியாக கண்ணதாசன், 

உள்ளத்தில் கதவுகள் கண்களடா 

இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா.......





allvoices

Wednesday, August 19, 2020

தலைநகரம்

 அதான் ஏற்கனவே சென்னை, மெட்ராசுனு ரெண்டு தலைநகரம் இருக்கே தம்பி் …?



allvoices

புகைப்பட கலைஞர்

 இன்னைக்கு உலக புகைப்பட கலைஞர் தினமாம்....... அதான் காலையில இருந்து அழகானவங்கள ஃபோட்டோ எடுக்கனும் னு யோசிச்சேன்............. அப்புறம் அவங்க கணவன் மார்கள் கோச்சிக்குவாங்கனு .........


. நம்மள விடவா இன்னொரு அழகு இருக்க முடியும் என்ற கர்வத்தோடு ....... ஒரு செல்ஃபி....


allvoices

Tuesday, August 18, 2020

Google பொறுப்பேற்று.....

 அப்புறம் செல்வக்குமார், பிளாக் லபல எப்படி போகுது......... யாராவது வந்து பாக்குறாங்க மா கமன்ட் பண்றாங்களா ?.............ஆக  இல்லனா இதுக்கு பொறுப்பேற்று சுந்தர் பிச்சை பதவி விலக வேண்டும்.........



allvoices

நல்ல மனசு

 இவ்வளவு பெரிய போன் வச்சிருந்தா மட்டும் போதாது.......... இந்த பிளாக் ல போஸ்ட் போடுறவங்களுக்கு ரிப்ளை பண்ண நல்ல மனசு வேணும்........போயா போ......


allvoices

Monday, August 17, 2020

வெட்டி பய

 உங்க போஸ்ட் பாக்கதான் வாட்சப்பே வரேன் ப்ரோ...


ஏன் நீ போட மாட்டியா...


உங்கள மாதிரி வெட்டி பய இல்ல சார் நானு...


allvoices

படிக்காதவன்

 ஏன் தம்பி யாராவது கமன்ட் பண்ணுவாங்களா.....

கொஞ்சம் பொறு, படிச்சு முடிச்சிட்டு கமன்ட் பண்ணுவாங்க.....


அப்படி பண்ணலைனா ?

அவங்களுக்கு படிக்க தெரியலனு அர்த்தம்......


allvoices

பிரேக்கப்.......

 ஏன் டா எதுக்கெடுத்தாலும் பிரேக்கப் பிரேக்கர் ங்குறீங்க.... அப்படி எத்தனை லவ் தான் டா பண்ண ?

ஊர்லயா இல்லை  ஃபேஸ்புக்லயா அண்ணே ?


allvoices

Sunday, August 16, 2020

இன்னோவா கார்

 ஒரே டல்லா இருக்கு யராச்சும் ஒரு ஜோக் சொல்லுங்க சிரிப்பு வந்தா இன்னோவா கார் பரிசு..



allvoices

சகவாச தோசம்...

 டேய் என்னடா அழுதுக்கிட்டு இருக்க. உடம்புக்கு என்ன ? காய்ச்சலா தலை வலியா ?

எங்களுக்கு காய்ச்சல் தலைவலி தான் வரனுமா ? காதல் வரக் கூடாதா ?


காதலா ? அதுல என்னடா பிரச்சினை ? அந்த பொண்ணா இல்லை அவங்க அப்பா வா ?

அவங்கலாம் இல்லை, என் பொண்டாட்டி தான் ணன்..

அடேய் எடுபட்ட பயலே .......செருப்பால அடிப்பேன்.


allvoices

நல்ல நாள்..

 அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்......

வாக்கிங் போய்க்கிட்டு இருக்கும் போது, ஒரு 2 பேர் பைக் ல வேமா வந்தாங்க.....


ஒரு 10 நிமிசம் வாக்கிங் போறவங்கள எல்லாம் பாத்துட்டு நேர என் கிட்ட வந்தாங்க.....

"அண்ணே இங்க பிளாக் ல சரக்கு எங்க கிடைக்கும் ?"

நமக்கு தெரியாதுங்க......

அடுத்து கொஞ்ச தூரம் தள்ளி 2 பொண்ணுங்க நோட்டிஸ் குடுத்துக்கிட்டு இருந்தாங்க. என் கூட நடந்து வந்த 3 பேரை விட்டுட்டு எனக்கு நோட்டிஸ் குடுத்தாங்க.....

மூலம் பௌத்திரம் நோட்டிஸ்......

இந்த நாள் ரொம்ப நல்ல நாளா விடிஞ்சிருக்கு........


allvoices

Saturday, August 15, 2020

உண்மையிலேயே

 எவன் எவன் படிக்கும் போது கிளாஸ் கட் அடிச்சாங்களோ.....


இப்ப பிள்ளைகளோட உக்கார்ந்து ஆன்லைன் கிளாஸ் அட்டன் பண்ணிக்கிட்டு இருக்காங்க.......

#verified


allvoices

Wednesday, August 12, 2020

கருணை உள்ளம்

 


கடைசில தலைவி போட்டிருந்த கண்ணாடியையும் ஏலம் விட்டுட்டாங்க.......... இனிமே அவங்க எத போடுவாங்க........


allvoices

குடிமகன்

 குடிகாரன எப்படிணன் கண்டு பிடிக்குறது......


அங்க மரத்துல 2 காக்கா தெரியுதா, அது அவங்களுக்கு 4ஆ தெரியும்...


அண்ணே அங்க ஒரு காக்கா தான் இருக்கு........



allvoices

ஆர்மி

 ஏண்ணன் இந்த வாரணம் ஆயிரம் படத்த எத்தனை தடவை பாப்பீங்க......


அதுல உனக்கு என்ன டா பிரச்சினை


இல்லணன் அதுல சூர்யா லவ் ஃபெயிலியர் ஆனதும் ஆர்மில சேந்துருவாருல.....


ஆமாம்......... அதுக்கென்ன இப்ப........


ஒரு ஃபெயிலியருக்கே ஆர்மினா, உங்களுக்கு 7 ஃபெயிலியர்...... நீங்க ஜேம்ஸ் பாண்ட் ஆகிருக்கனுமே அண்ணன்...........


அதெல்லாம் முடியாது....... நம்மள தேடி பக்கத்து தெருவுக்கே வர மாட்டாங்க...... இதுல என்னை பார்டருக்கு போகச் சொல்றியா........


allvoices

நம்பிக்கை

 இந்த பேஜ் ல நான் முதலில் போட்ட பதிவு இதான்.


இதுக்கு ஒரு 100 பேர் ரிப்ளை பண்ணாங்க......


100 பேரா ? இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு......


ஆரம்பத்தில நானும் தான் நம்பல. நம்புனா தான் அட்மின் ரீசார்ஜ பண்ணி விடுவேன் னு சொன்னாரு. அதுல இருந்து நானும் நம்பிட்டேன்........


allvoices

Tuesday, August 11, 2020

மானம் போச்சு

 டீச்சர் : உன் பேர் என்ன ?

பையன் : திராவிடச் செல்வன்

டீ : உன் அப்பா பேர் என்ன ?

பை : என் அப்பா பேர் செல்வக்குமார்


டீ : அவர் என்ன வேலை செய்றாரு ?

பை : எங்க அம்மா சொல்ற வேலைலாம் செய்வாரு..


allvoices

Monday, August 10, 2020

கிருஷ்ணன் ஜெயந்தி

 இன்னைக்கு காலைல 5 மணில இருந்து ஒரு பத்து பன்னிரண்டு பேர் தேடி வந்தாங்க.......


கிருஷ்ணன் ஜெயந்தியாம். அதுக்கு பாதம் போடனுமாம்.........


நம்ம ஏரியாலயே நீங்க தான் அழகா நடப்பீங்க கொஞ்சம் வாங்க னு கூப்பிடுறாங்க........




allvoices

குழந்தை

 அண்ணே ஒரு சந்தேகம்ணன்.........


உங்க நண்பர்கள் லாம் ஆளுக்கு 2 குழந்தை யோட  இருக்காங்க........... நீங்க மட்டும் எப்படிணன் குழந்தையாவே இருக்கீங்க.


(பொறாமை பிடித்தவர்கள் மாற்றுப் பாதையில் செல்லவும்




allvoices

Sunday, August 9, 2020

கிருத்திகை

 இன்னைக்கு ஏதோ கிருத்திகையாம்.....


எல்லா வீட்லயும் வேல் பூஜை பண்றாங்களாம்.....


நாம அதெல்லாம் பண்ணலாம்னு பாத்தா முருகன் படம் காலண்டர்ல கூட இல்லை.........


allvoices

Saturday, August 8, 2020

கில்லி...

 இந்த வேலு பயலுக்கு வேலையும் கிடையாது ஒன்னும் கிடையாது. அவன நம்பி எங்கூர்க்கார பிள்ள தனம் போகுது..............


லூசு கழுதை, முத்து மாமா நல்லா தான் பாத்துக்கிட்டாரு. அப்புறம் என்னவாம் அவளுக்கு.......


(இப்படி தான் எல்லா பொண்ணுங்களும் வெளியூர் வெளிநாட்டுக்காரங்களோட போய்ட்டா இங்க இருக்குறவங்களாமா என்ன பண்றது........)


நீ நெனைக்குற மாதிரி முத்து ஒன்னும் நல்லவன் இல்லை. தனத்தோடு அண்ணன் தப்பிய கொலைப்பண்ணிருக்கான்.......


அப்படியா விசயம்......


ஆமாம், இப்ப தான் எனக்கே தெரியும்.






#கில்லி பாத்துக்கிட்டே.........


allvoices

120 - 180

 பக்கத்து வீட்டுக்காரன் போர் போட்டதும் 120 அடில தண்ணீர் வந்துடுச்சா.....


நமக்கு 180 அடியிலைல வந்துச்சு.....


108கு போன் பண்ணி அவனுக்கு கொரனா இருக்குனு சொல்லிர வேண்டியதான்.......


allvoices

சங்கடம்

 மழை செஞ்சுக்கிட்டு இருக்கு......


நைட்டு தோசைக்கு தக்காளி சட்னி கேட்டேன். வச்சு தர மாட்டேங்குறாங்க...




allvoices

ராஜதந்திரம்

 உனக்குலாம் அறிவிருக்கா ? சப்பாத்திக்கு புதினா சட்னி வச்சிருக்க ?


என்ன சட்னி வச்சாலும் குறை சொல்ல தான் போறீங்க. சும்மா சாப்பிடுங்க..


ஏதோ நீ அழகா இருக்ங்குறதால இதெல்லாம் பொறுத்துக்கிட்டு இருக்கேன்..


பின் குறிப்பு : அரைமணி நேரத்தில் குருமா தயார் செய்யப்பட்டது.

இது தான் ராஜதந்திரம்...


allvoices

பழிக்கு பழி

 ஏங்க நைட்டு வரும் போது காபி தூள் வாங்கிட்டு வாங்க....


சரிமா...


ஏங்க எங்கங்க காபி தூள் ?


மறந்துட்டேன் மா... நாளைக்கு வாங்கிட்டு வந்துடுறேன்....


மறுநாள் காலையில்...

காலையில என்னம்மா சாப்பாடு...


சப்பாத்திங்க......


என்னம்மா சப்பாத்தி ல உப்பே இல்ல, போடலயா........


நீங்க தான் காபி தூள் வாங்கிட்டு வரலைல. 


அதுக்கு ???


அதே மாதிரி இதையும் நான் மறந்துவிட்டேன்.....


#ரைட்டு எவளவு தெளிவாக பழி வாங்குறாங்க....

..


allvoices

அதிகாரம்

 பக்கத்து வீட்ல போர் போடுற மெசின் சத்தம் காத கிழிக்குது. இன்னிக்கி மட்டும் வாடி போடின்னு அதிகாரம் பண்ணிக்கலாம் காதுல விழாது .......



allvoices

வயசு

 அப்பா நான் டோரா....


தம்பி தான் சோட்டா பீம்.....

அண்ணன் பென் 10

அப்ப அப்பா யாரு பாப்பா ?

நீங்களா ? இருங்க வரேன் அண்ணன் கிட்ட கேட்டுட்டு வரேன்......


ம்..... நீங்க தான் பா டோரால வர ட்ரோன்......

சரி பாப்பா

இந்தக் கேட்டதும் சமையல்கட்டுல இருந்து சிரிப்பு சத்தம் கேட்டுச்சு......


அப்ப நான் அதை பெரிசா எடுத்துக்கல....... நேத்து தான் அந்த டிரோன டீவில பாத்தேன்


"நான் வயசான டிரோன், இந்த பாலத்துக்கு கீழ் வாழுறவன்" னு டயலாக் வேற....,.




allvoices

Friday, August 7, 2020

சந்தோஷம்

 பிரம்மச்சாரி கல்யாணம் ஆனவன் சந்தோஷமா இருக்குறதா நெனைக்கிறான். கல்யாணம் ஆனவன் பேச்சிலர் சந்தோசமாக இருக்குறதால நெனைக்கிறான்..


என்ன ஒரு வித்தியாசம், பேச்சிலர் நைட்டு நெனைக்கிறான், கல்யாணம் ஆனவன் பகல் ல நினைக்கிறான்......


allvoices

சிங்கப் பெண்ணே

 பெண்கள் எல்லாம் சிங்கப் பெண்களே!!!!




ஸ்கூட்டி ல செல்ஃப் ஸ்டார்ட் வேலை செய்யும் வரை....


#verified


Yamaha Ray z சர்வீஸ் 1500/-


allvoices

கிரஷ்...

 இது நான் ஸ்கூல் படிக்கும் போது 100% அட்டன்டன்ஸ்காக குடுத்தது.......


ஏன்ணன் ஒரு நாள் கூடவா காய்ச்சல் தலைவலிக்கு லீவு போட்டதில்லை ? எப்படிணன் ?


ம்ஹூம். என் கிரஷ்ஷ பாக்குறதுக்கு தினமும் போயிடுவேன்.


கிரஷ்ஷா ஸ்கூல்லயா ? நீங்க படிச்சது பாய்ஸ் ஸ்கூல் ல....


ஆமாம்.... அப்ப கிரஷ் யாருன்னு புரியுதா ?


allvoices

Thursday, August 6, 2020

லவ் போடு 2

என்னணன் இத்தனை ஹார்ட் வச்சிருக்கீங்க..


அதான் சொன்னேனே லவ் மோடு.....

allvoices

லவ் மோடு

அண்ணே நீங்க லவ் பண்ணத பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் கேட்போம்......

மொட்டையா கேட்டா எப்படிடா, எத்தனாவது லவ்னு கரைக்டா கேளு 

அண்ணிய எப்படி லவ் பண்ணி கல்யாணம் பண்ணீங்க.......

அதுவா, மத்த எல்லாரையும் லவ் பண்ணும் போது சண்டையே வந்ததில்லை. ஆனால் இவங்கள லவ் பண்ணும் போது வாரத்துக்கு ஒரு சண்டை வரும். அதுவுமில்லாமல் பிரேக்கப் லாம் அப்ப கண்டு பிடிக்கலையா, அதனால் கல்யாணம் ஆகிப் போச்சு.....

allvoices

ஸ்பைடர் மேன் ஃபேன்

தம்பி அங்க ஃபேஸ்புக் டுவிட்டர்லைலாம் இராமன் இராவணன் சண்டை நடந்துக்கிட்டு இருக்கு... தெரியுமா ?


சாரி நான் ஸ்பைடர் மேன் ஃபேன்....

allvoices

Wednesday, August 5, 2020

இராமாயணம்

நமக்கு தெரிந்த இராமாயணம் இவ்வளவு தான்....




கோடு போட்டு நிற்கச்சொன்னான் 
சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால் 
ராமன் கதை இல்லையே

படா ஃபட் அடி என்னடி உலகம்
இதில் எத்தனை கலகம்..?
- கவிஞர் கண்ணதாசன்..

allvoices

Tuesday, August 4, 2020

சந்தோஷமாக வாழ

மனைவியுடன் சந்தோஷமாக வாழ வழிவகைகள்.

நேத்து நைட்டு பூராவும் உக்கார்ந்து எழுதிருக்கேன்.............


ஏதாவது டவுட் னா கேளுங்க......




allvoices

வாட்சப்பில் பயங்கரம்

டேய் வேலப்பா
டேய் கொட்டாச்சி இங்க வாடா

டேய் வாங்கடா உங்கள‌ வேற வெத்தல பாக்கு வச்சு அழைக்கனுமா


வந்து இந்த செல்வக்குமார் கிட்ட இருந்து போன வாங்கி வாட்சப்ப  uninstall பண்ணி மக்கள காப்பாத்துங்க.....

allvoices

கேட்டல்

சண்டை போடாத மனைவி கேட்டேன்
பாசமான கொளுந்தியா கேட்டேன்

சொன்னது கேக்கும் பிள்ளைகள் கேட்டேன்
சொல்லாமல் வரும் காதல் கேட்டேன்
சொல்லிட்டு வரும் வியாதியை கேட்டேன்

உப்புமா இல்லாத பிரேக் பாஸ்ட் கேட்டேன்
உப்புமா சாப்பிட பசியை கேட்டேன்

லாக் டவுன் மொத்தம் முடிய கேட்டேன்
டவுன் பஸ் ஓட முதல்வரை கேட்டேன்

இருமல் வந்தால் குணமாக கேட்டேன்
இல்லம் வந்ததும் சோறை கேட்டேன்

நண்பர்கள் நலமாக வாழ கேட்டேன்
நல்லது நடக்க இறைவனை கேட்டேன்

ஞாயிற்றுக்கிழமை தூக்கம் கேட்டேன்
ஞாலம் போற்றும் அறிவு கேட்டேன்

KGF இல்லாத கலர்ஸ் டீவி கேட்டேன்
துப்பாக்கி போடாத விஜய் டிவி கேட்டேன்

தோசைக்கு தக்காளி சட்னி கேட்டேன்
சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு குருமா கேட்டேன்
.
.
.

கேட்டதெல்லாம் கிடைக்கும்



allvoices

முப்பது மொழி கொள்கை

நாங்க 3 இல்லை 30 மொழி கூட படிக்க தயார். ஆனால் எந்த அரசு தகுதி அல்லது நுழைவு தேர்வாக இருந்தாலும் அந்தந்த பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலத்திலும் வினாத்தாள் இருக்க வேண்டும். அவளவு தான்.....



இப்ப தபால் துறை தேர்வு, இராணுவத்தில் மக்கள் தொடர்பு வேலை தேர்வுகள் இப்பவும் இந்தியில் மட்டுமே வைக்க படுகிறது.........

allvoices

டீ கடையில்

PTR டீ கடையில நின்னு டீ குடிச்சிட்டு இருந்தேன். அப்ப ஒரு இந்தி காரன் பக்கத்தில் வந்து டீ குடிச்சிட்டு இருந்தான்.


தம்பி உனக்கு தமிழ் தெரியுமாப்பா ?

தெரியும் ஜு


உனக்கு இந்த கராத்தே குங்ஃபூ இந்த மாதிரி சண்டை ஏதாவது தெரியுமா பா ?

இல்ல ஜு தெரியாது

அப்ப நான் குடிச்ச டீ கிளாஸ கீழ வைடா ________________........



allvoices

கண்றாவி

என்ன கண்றாவிடா இது?

கண்றாவி இல்லைங்க, கனவு கன்னி மாளவிகா மோகன் மாடர்ன் போட்டோஸ்

allvoices

Monday, August 3, 2020

பிரே பண்ணுவோம்..

என்னம்மா சாமி கும்புடுற

இன்னைக்கு காளான் பிரியாணி செய்யப் போறேன் அதான்

அதுக்கு நான் தானம்மா சாமி கும்பிடனும்.........

allvoices

இரத்த அழுத்தம்

லோ pressure க்கு ஒரு மருந்து சொல்லுங்க 



போய் பொண்டாட்டி கிட்ட பேச்சு குடு ,  pressure ஏறும் , அப்போ நார்மல் ஆகிடும்

allvoices

போற போக்கில் ஒரு சோசியல் சர்வீஸ்

நமக்கு எப்பவுமே பொதுநலன் ஜாஸ்தி. அதுலயும் பொண்ணுங்கனா ஓடிப் போய் உதவி செய்வோம்........


ஒரு 20 வயசு மாடர்ன் பொண்ணு, கையில ரெட் மீ போன், புளு ஜீன்ஸ் ஒய்ட் டாப்ஸோட வந்து போத்தீஸ் கிட்ட நின்னுகிட்டு இருந்துச்சு. 

நான் உடனே இங்க பொது இடத்தில் ஜிப் போடாம நிக்கக் கூடாது. கொஞ்சம் ஜிப் போட்டு பத்திரமா வைங்கனு சொன்னேன்.


அந்த பொண்ணு இந்திலயே வஞ்சுச்சு. அப்புறம் ஒரு பெரியவர் ஏன் மா ஹேண்ட் பேக் இப்படி திறந்து வச்சிருந்தா எவனாவது திருடிட்டு போயிருவான்மா, முதல் ஜிப்பை போடுமானு சொன்னாரு.

அப்புறம் தான் அந்த பொண்ணு எனக்கு ஒரு ஜிகர்தண்டா வாங்கி குடுத்துச்சு.....




allvoices

G pay

தோழி தைரியமா வந்து ராக்கி கட்டுங்க  இல்ல Gpayல 500 ரூ போட்டு விடுங்க.....



allvoices

Who is next Super Star ?