
'காலை 9 மணிக்கு விஜய் சார் அடையார்லே ஓட்டு போட வர்றாரு. ப்ளீஸ் கொஞ்சம் கவர் பண்ணிடுங்களேன்!' முதல் நாளே நிருபர்களுக்கு தகவலை சொல்லிவிட்டார்கள் நடிகர் விஜய் தரப்பிலிருந்து. 'வழியெல்லாம் பார்த்துக்கிட்டே வந்தேன். மக்கள் ஆர்வமா ஓட்டுப் போடுறாங்க. இந்த கடமையை எல்லாரும் முறையா செய்யணும்' என்றார் விஜய்.

திருவான்மியூர் வாக்கு சாவடியில் 'தல' அஜீத் காலை ஏழரை மணிக்கே வந்து க்யூவில் காத்திருக்க துவங்கினார். பொதுமக்கள் 'நீங்க க்யூவிலே நிக்க வேணாம். நேரா போயி வோட்டு போடுங்க'ன்னு சொல்ல, 'பரவாயில்லே, இருக்கட்டும்'னு சொல்லி க்யூவில் நின்றே வாக்களித்தார் அஜீத்.

குடும்பத்தோடு வாக்கு சாவடிக்கு வந்திருந்தார் நடிகர் சிவகுமார். சூர்யா, கார்த்தி இருவரும் கூடவே வந்திருந்தாலும், திருமதி ஜோதிகா மிஸ்சிங். இவருக்கு வோட்டு மும்பையில் என்பதால் அவர் மும்பைக்கு போய்விட்டாராம். அண்ணா நகருக்கு வோட்டு போட வந்திருந்த விஷாலை போலீஸ் கான்ஸ்டபிள்கள் க்யூவில் நிற்க விடாமல் உள்ளே அழைத்து சென்றார்கள். பின்னாலேயே வந்த ஆர்யாவையும் இப்படி அழைத்துச் செல்ல, கடுப்பான பொதுமக்கள் பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்கள். 'பெரிய தலைவர்களே க்யூவில் நிக்கும்போது இவங்களுக்கு என்னவாம்?' என்று அவர்கள் கொந்தளித்தார்கள். சினேகா, பிரசன்னா, பரத், விவேக், பிரபு என்று பெரிய நட்சத்திர பட்டாளமே தங்கள் வாக்குகளை முறையாக செலுத்தினார்கள்.
கொளுத்தும் வெயிலில் க்யூவில் நின்று வாக்களித்தார்கள் நட்சத்திரங்கள் என்று தலைப்பு செய்தி போடாத குறையாக 'வெயில்' சமாச்சாரத்தை ஹைலைட் செய்தன பத்திரிகைகள்!
No comments:
Post a Comment