
மதுரை தொகுதியில் போட்டியிடும் மு.க.அழகிரி தனக்கு ரூ. 19.43 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியிடம் ரூ. 3.55 கோடி மட்டுமே சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.அழகிரியின் சொத்து விவரம்..
ரொக்கக் கையிருப்பு - ரூ. 1 லட்சம். மனைவியிடம் ரூ. 50 ஆயிரம். மகனிடம் ரூ. 25 ஆயிரம்.
வங்கி முதலீடுகள் - அழகிரிக்கு ரூ. 6.5 கோடி, மனைவிக்கு ரூ. 67.4 லட்சம், மகனிடம் ரூ. 2.3 கோடி.
நிதி நிறுவன முதலீடுகள் - அழகிரி ரூ. 96 லட்சம், மனைவியிடம் ரூ. 83.3 லட்சம், மகனிடம் ரூ. 1.06 கோடி.
நகைகள் - ரூ. 1.10 லட்சம் மதிப்பிலான 85 கிராம், மனைவியிடம் 9.10 லட்சம் மதிப்பிலான 700 கிராம், மகனிடம் ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான 50 கிராம்.
வாகனங்கள் - ரூ. 1.4 லட்சம் மதிப்பிலான ஹோன்டா சிட்டி, 1.2 லட்சம் மதிப்பிலான லேன்ட்ரோவர், மனைவியிடம் ரூ. 5.33 லட்சம் மதிப்பிலான டயோட்டா இன்னோவா, மகனிடம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான ஸ்கோடா சூப்பர்.
அசையா சொத்துக்கள்
ரூ. 2.58 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மனைவிக்கு ரூ. 1.27 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மகனிடம் ரூ. 1.24 கோடி மதிப்பிலான விவசாய நிலம்.
வீடுகள்
மதுரை - ரூ. 60 லட்சம்.
அடுக்குமாடிக் குடியிருப்பு - ரூ. 34 லட்சம்.
ரூ. 2.09 கோடி மதிப்பிலான வர்த்தக கட்டடங்கள், பிளாட்டுகள்.
(மகனுக்கு) சென்னை பண்ணை இல்லம் மற்றும் பிற - மதிப்பு ரூ. 3.27 கோடி.
மொத்த சொத்து மதிப்பு - ரூ. 19.43 கோடி.
கொள்ளிமலை குப்பு:
இவருக்கு இவ்வளவுதானா சொத்து?!
கொஞ்சம் ஏழை இல்லை?
தயாநிதி மாறன் சொத்து விவரம்
ரொக்க்க கையிருப்பு - ரூ. 49,711. மனைவியிடம் ரூ. 17,699.
வங்கி முதலீடுகள் - ரூ. 1.85 கோடி, மனைவியிடம் ரூ. 27.14 லட்சம், குழந்தைகள் பெயரில் ரூ. 6.35 லட்சம்.
நிதி நிறுவன முதலீடுகள்
ரூ. 27.14 லட்சம், மனைவி பெயரில் ரூ. 3.68 லட்சம்.
நகைகள்
ரூ. 59,010 மதிப்பிலான 42 கிராம் தங்க நகை.
மனைவியிடம் ரூ. 52.15 லட்சம் மதிப்பில் 1745 கிராம் தங்க நகை, 18 கிலோ வெள்ளி, குழந்தைகள் பெயரில் 17.37 லட்சம் மதிப்பிலான 1205 கிராம் தங்க நகைகள்.
வாகனங்கள்
மெர்சிடிஸ் பென்ஸ் இ240, மாருதி ஜிப்சி, டயோட்டா இன்னோவா.
பிற சொத்துக்கள்
முரசொலி மாறன் அறக்கட்டளையில் ரூ. 8.80 லட்சம், மனைவியிடம் ரூ. 11 லட்சம், குழந்தைகள் பெயரில் ரூ. 7.34 லட்சம் சொத்து.
அஞ்சுகம் குடும்ப அறக்கட்டளையில் ரூ. 54 ஆயிரத்து 332 பங்கு, மல்லிகா மாறன் நல அறக்கட்டளையில் ரூ. 12,000 பங்கு. மனைவி பெயரில் பிற அசையும் சொத்துக்கள் ரூ. 13.90 லட்சம் மதிப்பில்.
தயாநிதி மாறன் பெயரில் அசையா சொத்து எதுவும் இல்லை. !!!
மொத்த சொத்து மதிப்பு ரூ. 3.55 கோடி.
No comments:
Post a Comment