Tuesday, May 12, 2009

என் தொகுதி எம்.பி ( மு.க. அழகிரி)


நீங்கள் மதுரையின் நாடாளுமன்றக்குழு உறுப்பினராகவே ஆகிவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
கீழ்வரும் உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார்களை தாண்டி உங்களை தரிசிக்க முடியுமா? உங்கள் பொறுப்பு எல்லாவற்றையும் இவர்களிடம் விட்டு விட்டு மதுரையை சுற்றி நீங்கள் வாங்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இருக்கும் பண்ணை வீடுகளில நீச்சலடிக்க போய் விடுவீர்கள்.பிறகு மதுரையை யார் காப்பாற்றுவது? உங்களுக்கு தெரியாவிட்டால் இருந்து விட்டு போகட்டும். நீங்கள் பதவி கொடுத்துள்ள சிலரின் லடசணத்தை பாருங்கள். இப்படி முடிவெடுக்கும் நீங்கள் மதுரை எம்பி ஆகத்தான் வேண்டுமா….?

தேன்மொழி்


எழுத படிக்க தெரியாத இவர் உங்களின் ஆசியால் மதுரை மேயராக ஆக்கப்பட்டவர். இவரது கணவர் கோபிநாதன். மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் வெளிநாட்டு துணிகள் என்ற பெயரில் தரையில் கடை விரித்து படிப்படியாக முன்னேறியவர்??எந்த வித பெரிய வருமானமும் இல்லாமல் இருந்த கோபிநாதன் இன்று மதுரையின் பிரபல கோடீஸ்வரர். உங்களின் அடிப்பொடியாக இருந்த கோபிநாதனுக்கு மதுரை மாநகராட்சியின் தெற்குமண்டல தலைவர் பதவியை கொடுத்து அழகு பார்த்தீர்கள். இந்த கோபிநாதனின் லட்சணம் என்ன தெரியுமா? இவரது மண்டலத்திற்குட்பட்ட எந்த இடததில் வீடு கட்டினாலும், எலவு விழுந்தாலும் மாநகராட்சி இடத்தை பயன்படுத்துவது தெரிந்தால் அங்கே கோபிநாதனின் கார் போய் நிற்கும். 10 ஆயிரமோ, 20 ஆயிரமோ கொடுத்தால் தான் கார் கிளம்பும். இல்லாவிட்டால் வீடு கட்ட முடியாது.
கோபிநாதனின் மனைவியான தேன்மொழி, மேயர் ஆன பிறகு தான் வீட்டில் காகித பேப்பர்களில் கையெழுத்து போடவே கற்றுக் கொண்டது தனிக்கதை.இப்படி எந்த படிப்பறிவும் இல்லாத ஒரு பெண்ணை மேயராக்கினால் மதுரை எப்படி வளரும்? அதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு என்ன கவலை? தேன்மொழியை மேயராக்கியது எதற்காக?


துணைமேயர் பி.எம்.மன்னன்


திமுக வின் முன்னாள் அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான தா.கிருஷ்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் தற்போது மதுரையின் துணைமேயராக இருக்கும் மன்னன் 2 வது குற்றவாளி உங்கள் நண்பர் என்பதற்காக இவருக்கு துணைமேயர் பதவி.ஒரு காலத்தில் நண்பர்களிடம் ஓசி சட்டை வாங்கி அணிந்து கொண்டிருந்த பி.எம்.மன்னனின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 100 கோடி என்கிறது மாநகராட்சி வட்டாரம். இது தவிர பினாமிகளை வைத்துஒரு விளம்பர ஏஜன்சியை நடத்தி வருவது தனிக்கதை. மாநகராட்சி வீதிகளில் போர்டுகளை குழி தோண்டி (வழிகாட்டி பலகைகள்) அதில் பெயரளவுக்கு திருக்குறளை எழுதி வைத்துவிட்டு விளம்பரங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். இதில் எவ்வளவு பணம் யார் பாக்கெட்டுக்கு போகிறது என்பது மன்னனுக்கே வெளிச்சம்..


எஸ்ஸார் கோபி


மதுரை விமானநிலையம் அமைந்துள்ள இடத்தின் குறுநில மன்னர் இவர். சூதாட்ட விடுதி, திருட்டு விசிடி தொழிற்சாலை, விபச்சாரம் என்று செயது வருவது உங்களுக்கு தெரியாதா? தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் 3 வது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர் நடத்தும் சூதாட்ட கிளப்பில் விளையாட . சென்னையில் இருந்து கூட விமானத்தில் வந்து லடசக்கணக்கில் பணத்தை வைத்து விளையாடி விட்டு செல்கிறார்கள். இது தெரியாதா உங்களுக்கு?


அட்டாக் பாண்டி


உங்களை குறைத்து மதிப்பிட்டதற்காக தினகரன் பத்திரிகை அலுவலகம் மதுரையில் தீ வைத்து எரிக்கப்பட்டது.. இதில் 3 பத்திரிகையாளர்களும் கொளுத்தப்பட்டனர். இந்த தீவைப்பு தாக்குதலை தொடங்கி வைத்தவர் தான் அட்டாக் பாண்டி. குழந்தைகள் பார்த்தால் நிச்சயமாக மயக்கம் போட்டு விழுந்து விடும் தோற்றம் இவருக்குநீங்கள் கொடுத்த பரிசு என்ன? மதுரை மாவட்ட வேளாண்விற்பனைக்குழு தலைவர் பதவி. அய்யோ…ஒரு முன்னோடி விவசாயிக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டிருந்தால்…மதுரையின் வேளாண்மை சிறந்திருக்குமே?…படிக்கவே இலலாத, பயிருக்கும், பல்லிக்கும் வித்தியாசம் தெரியாத பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட ஒரு ரவுடிக்கு நீங்கள் வேளாண்விற்பனைக்குழு தலைவர் பதவி அளித்தீர்களே…இதன் அர்த்தம் என்ன?


மிசாபாண்டியன்


இவரை போல் ஒரு பச்சோந்தியை பார்க்கவே முடியாது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அம்மாவே சரணம் என்றார். பிறகு திமுக வுக்கு வந்து சேர்ந்தார். குறைந்த படசம் 100 ரவுடிகள் புடை சூழ இருக்கும் மிசா உங்கள் வீ்ட்டிற்கு அருகில் குடியிருப்பது தான் வேறு வழியே இல்லாமல் நீங்கள் மிசாவை வைத்திருக்க காரணம். ஏனெனறால் உங்களை காப்பாற்ற உங்களுக்கு மதுரையில் யார் சொந்தங்கள்? எச்சி சோற்றுக்கு 100 காக்கா..அதில் மிசாவும் ஒன்று .


வி.கே.குருசாமி


ஒரு காலத்தில் லோடுமேன் வேலை பார்த்த இவர் இப்போது மதுரை மண்டலத்தலைவர்..
இப்படி பட்டியல் நீளுகிறது.. நக்கீரனும், சிவனும் விவாதம் நடத்திய மதுரையில் உங்களின் கைங்கர்யத்தால் யாரெல்லாம் மதுரையை ஆளும் நிலையில் இருக்கிறது பார்த்தீர்களா…அரசியலுக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவன் வந்து பார்ததால் ….மூர்ச்சையாகி விழுந்து விடுவான். நீங்கள் எம்.பி யாகி விட்டால் மதுரை என்னவாகும்?தயவு செய்து நீங்கள் தேர்தலில் நி்ற்கத்தான் வேண்டுமா? கொஞ்சம் சிந்தியுங்கள்…மதுரை மக்கள் நன்றாக இருந்து விட்டு போகட்டுமே...பாவம் விட்டுவிடுங்கள்.





பின் குறிப்பு:-

(இது என் சுய ஆதங்கம், மேலே உள்ளது போல் Copy & paste அல்ல)

உங்களுக்கு ஓட்டு போட வேண்டி என் வீட்டிற்க்கு வந்த தங்கள் கைகூலிகள் தலைக்கு ரூ.500/- என்ற வீதத்தில் கொடுத்துச்சென்றுள்ளார்கள்.கூடவே தொலைபேசி எண்ணும் வாங்கிச்சென்றுள்ளார்கள்.. பணப்பட்டுவாடா சரியாக நடக்கிறதா, ஒழுங்காக எல்லாம் கொடுத்தார்களா என்பதை சரிபார்க்க!

அஞ்சாநெஞ்சன் நேருக்கு நேர் தேர்தலை எதிர்கொள்ளாமல், இப்படி பணத்தைக்கொடுத்து ஜெயிக்க நினக்கலாமா?

2-கண்டைய்னரில் மதுரைக்கு பணம் வந்தது. இதை வருமானவரித்துறையும் கண்டுகொள்ளவில்லை.

கோவையில் இராணுவ லாரிகளை தடுத்து சூறையாடிய மக்களுக்கு, இது போன்ற பண லாரிகள் கண்ணில் படவில்லையே?

சரி சரி, நான் இதுக்கு மேல் எழுதினால் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவீங்க!

allvoices

1 comment:

Who is next Super Star ?