முதலில் ஐபிஎல், இப்போது ஐசிசி 20 - 20 உலக கோப்பை நடை பெறுகிறது. அதாவது வரலாறு மாறுகிறது. ஆறு மணி நேரம் பார்த்த மட்டை பந்து விளையாட்டு இப்போது வெறும் இரண்டரை மணி நேரம் மட்டுமே நடக்கிறது. பொதுவாக இந்த மட்டை பந்து விளையாட்டை இளைஞர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கண்டு கழிக்கின்றனர். அவர்களும் தங்கள் படிப்பு மற்றும் தேர்வு முறைகளில் மாற்றம் வேண்டும் என்கிறார்கள். அவை
1. தேர்வு நேரம் ஒரு மணி நேரம்
2. மொத்தமதிப்பெண் 50, தேர்ச்சி மதிப்பெண் 25
3. முதல் அரைமணி நேரம் கண் கண்ணிப்பளர்கள் இருக்கக்கூடாது. (Power Play)
4. மாணவர்களுக்கு அவர்களுக்கு தெரிந்த எதாவது ஒரு கேள்வியை எழுதி அதற்கு விடையும் எழுத வேண்டும். (Free hit).
5. அவர்கள் தேர்வு எழுதும் போது உற்சாகப்படுத்த தொலைகாட்சியில் மாண்ட மயிலாட போன்ற சமூக அக்கறையுள்ள நிகழ்ச்சிகளை காண்பிக்க வேண்டும். (Cheerleaers)
6. தேர்வு முடிந்த பிறகு அந்த தேர்வை பற்றி ஒரு அரை மணி நேரம் நமீதா, சிம்ரன் போன்றோர் அலசி ஆராய வேண்டும். (Fourth Ampire)
இவ்வாறு தேர்வு நடந்தால் மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கு பெறுவதோடு, வெற்றியும் பெறுவான்.
மாற்றம் தேவை. முன்னால் மாணவனின் கோரிக்கை.
Friday, June 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment